மீமிசல் ஊராட்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திடக்கோரி மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T.ராமச்சந்திரன் வலியுறுத்தல்!



மீமிசல் ஊராட்சியில் புதிய துணை மின் நிலையம்    அமைத்திடக்கோரி தமிழ்நாடு நிதி & மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து அறந்தாங்கி சட்டமன்ற  உறுப்பினர் S.T.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் காரக்கோட்டை ஊராட்சியிலும், அரிமழம் ஒன்றியத்தில் மதகம் ஊராட்சியிலும்  புதிய துணை மின் நிலையங்களை உடனடியாக நிறுவி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,   அதுபோல் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மீமிசல் ஊராட்சியிலும் புதிய துணை மின் நிலையம் ஒன்றினையும் அமைத்திடக்கோரி தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை 14/06/2024 அன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments