புதுக்கோட்டை- ராமநாதபுரம் இணைப்பு சாலை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தையும் ராமநாதபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாக திருப்புனவாசல், கானூா் வழிச் சாலை உள்ளது.
சுமாா் 18 கிமீ தொலைவிலுள்ள ஒருவழி சாலையில், பாதி தொலைவு இரு வழிச் சாலையாக ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள தொலைவு மேம்படுத்தப்படவில்லை. விடுபட்ட பகுதியையும் இரு வழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, உங்கள் தொகுதியில் முதல்வா் என்னும் திட்டத்தின் கீழ் சுமாா் 6 கிமீ தொலைவுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, இருவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 25 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன.
தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாா் நிலையில் உள்ள இச்சாலையின் தரத்தை தீயத்தூா், பொன்பேத்தி உள்ளிட்ட 4 இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளா் செந்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை கோட்டப் பொறியாளா் வேல்ராஜ், ஆவுடையாா்கோவில் உதவிக் கோட்டப் பொறியாளா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.