தஞ்சாவூர்- அரியலூர், தஞ்சாவூர்- புதுக்கோட்டை, மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்: மத்திய ரயில்வே அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை




மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்த தஞ்சாவூர் எம்.பி. முரசொலி
டெல்லியில் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது: தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு தினமும் பகல் நேர ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக கம்பன் ரயிலை வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும். திருச்சி- ஹவுரா, திருச்சி- பாலக்காடு, திருச்சி- திருவனந்தபுரம் ரயில்களை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர்- அரியலூர், தஞ்சாவூர்- புதுக்கோட்டை, மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை ரயிலை அதிராம்பட்டினம், பேராவூரணியிலும்,

செந்தூர் விரைவுரயிலை பூதலூரிலும் நிறுத்திச் செல்ல வேண்டும் என
தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments