மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில், புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடினார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக மாணவர்களின் கல்வி ஆர்வத்தினை மேம்படுத்தி வருகிறார். மாணவர்கள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வதுடன், பொதுஅறிவு புத்தகங்கள், சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த நிலையினை அடைவதற்கு வழிவகை ஏற்படும். மேலும் மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியில் உயர்நிலையினை அடைவதற்கான வழிகாட்டுதல்கள், கல்வியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மாணவ, மாணவிகளுக்கு கூறப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன் மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments