திருச்சி சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமாருடன் துரை வைகோ எம். பி., ஆலோசனை செய்தார். இதில் திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, விமான நிலைய இயக்குனர், மாவட்ட துணை ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர், கிழக்கு பகுதி வட்டாட்சியர், கிராம புற நெடுஞ்சாலை உதவி இயக்குனர், துணை வட்டாட்சியர் (நிலம் கையகப்படுத்துதல்), விமான நிலைய வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்க
கடந்த 1-ம் தேதி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்பிக்கள் கே.என்.அருண் நேரு, ஜோதிமணி, முரசொலி ஆகியோருடன் நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.
அதன்படி கூடுதல் விமான சேவைகள், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு ஓடுதள பாதை விரிவாக்கம், இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் படி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்க சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறித்தும், திருச்சியில் இருந்து புதுதில்லிக்கு நேரடி விமான சேவை போன்ற செயல் திட்ட பணிகள் குறித்தும், தாம் முன்னெடுக்கும் பணிகளுக்கு அனைவரது பங்களிப்பு குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ரூ 1112 கோடி செலவில் உருவக்கப்பட்டது. புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்தில் 3,480 பயணிகளை கையாள முடியும். பயணிகளுக்கும் பயணிகளுடன் வருவோருக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்தப்படுகிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17.60 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். இவர்களில் 13.50 லட்சம் பேர் சர்வதேச பயணிகள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.