ஆவுடையார்கோவில் அருகே குட்டையில் மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி




ஆவுடையார்கோவில் அருகே வாட்டாத்தூர் கிராமத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு உதவி மீன் வள ஆய்வாளர் மோனிகா தலைமை தாங்கி பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு முறைகளான கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, கொடுவாய் ஆகிய மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் மீன் வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் மானியங்கள் குறித்தும் எடுத்து கூறினார். ஆவுடையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சவீதா வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், நெல் வரப்பில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள், பசுந்தாள் பயிர் சாகுபடி செய்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிமேகலை வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள் அவற்றின் மானியங்கள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்து கூறினார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர் அலி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments