குண்டூர் அருகே லாரி மீது பஸ் மோதல்; 13 பேர் காயம்




குண்டூர் அருகே லாரி மீது பஸ் மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.

லாரி மீது மோதியது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், மருதம்பட்டியை சேர்ந்த டிரைவரான பிச்சைமுத்து(வயது 60) என்பவர் ஓட்டினார். குண்டூர் அருகே வந்தபோது குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார்.அப்போது சாலைேயாரமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பஸ் மோதி, சாலையோரத்தில் உள்ள முட்புதர் பகுதியில் இறங்கி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 13 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

அவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிைடயே தப்பியோடிய டிரைவர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments