கோட்டைப்பட்டினத்தில் மமக நடத்திய மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி... மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்




கோட்டைப்பட்டினத்தில் மமக நடத்திய  மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை  நிறுத்த கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை (கிழக்கு )மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மதுவுக்கு எதிரான  ஆர்ப்பாட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் மாவட்ட தலைவர்  B.சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது  மாவட்ட பொருளாளர் நூர் முகமது மாவட்டத் துணைத் தலைவர் MSK முகமது சாலிகு மமக மாவட்ட துணை நிர்வாகிகள் அஜ்மல்கான்  பைசல் அகமது அப்துல் ஜலீல் தமுமுக துணை செயலாளர் அஜ்மல்கான் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். மமக மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் SMI மாவட்ட செயலாளர் கலந்தர்பாட்ஷா மாவட்ட தொண்டர் அணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் கண்டண  கோஷம் எழுப்பினர் .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுல் ஆப்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷாஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments