ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் அதனை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ் நிலையம்
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்நிலையம் விரிவாக்கம் செய்து நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி அரசு அனுமதி அளித்தது. மேலும் பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு வியாபாரிகளுக்கு பழைய பஸ் நிலையத்தில் சங்கத்தினரின் ஒப்புதலின்படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரிவாக்க பணிக்காக கடந்த ஆண்டு பஸ்நிலைய கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அமைக்கப்படும் புதிய பஸ் நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில், 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் அமைவதோடு, மக்கள் வசதிக்காக 92 கடைகளும் அமைக்கப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் 231 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், கார்கள் வந்துசெல்ல அணுகு சாலையும் அமைக்கப்பட உள்ளது.
நவீன வசதிகள்
மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆண், பெண்களுக்கு தலா 8 கழிப்பறைகள் வீதம் 16 கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. பயணிகள் நடப்பதற்கு ஏதுவாக பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளன. பஸ்நிலையத்தின் அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்து வரும்நிலையில் தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.
மீதமுள்ள பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.