தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹாவை சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வலியுறுத்தல்!



தஞ்சாவூர் -  பட்டுக்கோட்டை & தஞ்சாவூர் - புதுக்கோட்டை & தஞ்சாவூர் - அரியலூர் & பட்டுக்கோட்டை - மன்னார்குடி‌ புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்கதஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹா அவர்களை சந்தித்து  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி Bsc LLB வலியுறுத்தினார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹா அவர்களை சந்தித்து  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி Bsc LLB வலியுறுத்தினார்.

புது டெல்லியில் நேற்று தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா அவர்களை நேரில் சந்தித்து தஞ்சாவூர்-சென்னை இடையே புதிய ரயில் வசதியினை தொடங்கவும், திருச்சி திருவனந்தபுரம், திருச்சி ஹௌரா மற்றும் திருச்சி-பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்யவும், தாம்பரம்-செங்கோட்டை மற்றும் செகந்திராபாத்-இராமநாதபுரம் விரைவு வண்டிகளை பேராவூரணியில் புதிய நிறுத்தத்தை அமல்படுத்தவும், செந்தூர் விரைவு வண்டி இரு திசைகளிலும் பூதலூர் ரயில் நிலையத்தில் நிற்கவும்,  1. அரியலூர் - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை  2. மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் 3. தஞ்சாவூர் - புதுக்கோட்டை ஆகிய மூன்று புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்கவும் கோரிக்கை வைத்தார். 

மேலும் சென்னை எக்மோர் காரைக்குடி இடையிலான கம்பன் விரைவு வண்டியை மீண்டும் இயக்குவதற்கும் தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டியை வாரம் 7 நாட்கள் இயக்கவும் கோரிக்கை வைத்தார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments