கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதவித்தொகை வந்துள்ளதாக கூறி...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் ஒரே பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரது வீட்டிற்கு கடந்த 2 நாட்களாக செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசும் மர்மநபர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என்றும், மாணவிகளின் பெயர், அவரது தாய் பெயர், மாணவிகள் 1-ம் வகுப்பு படித்த பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்த பள்ளி விபரங்கள் வரை சரியாக கூறுகின்றனர்.
அதன்பின்னர் மாணவி கல்லூரியில் தொடர்ந்து படிக்க உங்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.38,500 வந்துள்ளது. எனவே அதனை நாங்களே உங்களுக்கு போன் மூலம் அனுப்பி வைக்கிறோம் என்று கூறி பேசியுள்ளனர். இதனை நம்பிய சில பெற்றோர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை கூற மர்ம நபர்கள் பணம் அனுப்பியதாக ஒரு தவறான ரசீதை முதலில் அனுப்பி பெற்றோர்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் பெற்றுள்ளனர்.
கோரிக்கை
இதே போல் அன்னவாசலில் கடந்த 2 நாட்களில் 3 மாணவிகளின் வீட்டிற்கு மர்ம நபர்கள் செல்போனில் பேசியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைமில் பெற்றோர் புகாரும் அளித்துள்ளனர். மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படித்த விபரங்கள், பெற்றோர் விபரங்கள் அவர்களது செல் போன் எண்களை வைத்து இதுபோன்று பணம் பறிக்கும் மர்மநபர்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மர்ம நபர் பெற்றோர்-மாணவிகளிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.