புது டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் அவர்கள் நேற்று நேரில் சந்தித்து நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான ரயில் சார்ந்த கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் உள்ள கோரிக்கைகள் விவரம்:-
1) திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளமையினால் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும்.
2) காரைக்கால்- திருவாரூர்- தஞ்சாவூர் தடத்தினை விரைந்து இரட்டை வழி பாதையாக அமைத்திட வேண்டும்.
3) தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் இதுகாறும் செய்து முடிக்கப்படாத திருவாரூர்- காரைக்குடி தடத்தை விரைந்து மின்மயம் ஆக்க வேண்டும். மேலும் இந்த தடத்தை இரட்டை வழி பாதையாகவும் மாற்றம் செய்ய வேண்டும்.
4) திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம் பள்ளி பாதையை கோடியக்கரை வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
5) மதுரை- புனலூர்- மதுரை ரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
6) வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம்- செங்கோட்டை- தாம்பரம் அதிவேக விரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும்.
7) திருப்பதி- மன்னார்குடி- திருப்பதி வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்கிட வேண்டும்.
8) வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கு திருவாரூர், தஞ்சாவூர் வழியாக இரவு நேரத்தில் ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும்.
9) யாத்திரிகர்கள் நலன் கருதி அதிகாலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்.
10) காலை 8:15 மணிக்கு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலையும், மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயிலையும் அலுவலகம் செல்வோர் நலன் கருதி செங்கல்பட்டு அல்லது குறைந்தபட்சம் விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
11) மருத்துவக் கல்லூரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மாணாக்கர்கள் நலன் கருதி காலை 6-00 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்ட மயிலாடுதுறை வரும் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
12) அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் நலன் கருதி காலையில் காரைக்குடியில் இருந்து ஒரு பயணிகள் ரயில் மன்னார்குடி- மயிலாடுதுறை ரயிலை திருவாரூரில் இணைக்கும் வண்ணம் இயக்க வேண்டும்.
13) அம்ரித் பாரத் திட்டத்தில் நாகப்பட்டினம் நாகூர் வேளாங்கண்ணி ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும்.
14) அனைத்து ரயில்களுக்கும் கொரடாச்சேரி, கீவளுர், பேரளம், முத்துப்பேட்டை ஊர்களுக்கு நிறுத்தம் வழங்கிட வேண்டும்.
15) பாம்பன் பால வேலைகள் முடிந்த பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.
16) சென்னையில் இருந்து திருச்சி மார்க்கத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வழியாகவும் ஒரு சில ரயில்கள் இயக்க வேண்டும்.
17) பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் இந்தப் பகுதியில் இருந்து சென்னைக்கும் கோவைக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.
18) திருச்சி- திருவாரூர் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.
19) நாகப்பட்டினம் கீரை கொல்லை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கீழ் பாலம் அமைக்க வேண்டும்.
20) நாகப்பட்டினம்- திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய பாதை அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
21) பேரளம்- காரைக்கால் பாதை பணிகள் முடிந்த பிறகு தற்போது திருவாரூர் வழியாக இயங்கும் எந்த ரயிலையும் வழிமாற்றம் செய்யக்கூடாது.
கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் இயன்றவரை ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.