மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் வெறி நாய் கடித்து 4 சிறுவர்கள் காயம்




மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் வெறி நாய் கடித்து 4 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் அதே வளாகத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை மாணவர்கள் உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு வெளியே நின்று விளையாடி கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சென்ற வெறிநாய் ஒன்று பள்ளி மாணவர்களை விரட்டியது. 

இதில் பீதியடைந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அங்கன்வாடியில் இருந்த சிறுமி தீட்சையாஸ்ரீ (வயது 3), 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஷிம் முஸ்தபா (10), ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் அகிலேஷ் (வயது 12), அமலேஷ் (12) ஆகிய 4 பேரையும் கடித்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து, அந்த நாயை அங்கிருந்து விரட்டிய பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள், நாய் கடித்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் தீட்சையாஸ்ரீக்கு லேசான காயம் என்பதால் அவரை தவிர மற்ற 3 மாணவர்களும் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பள்ளி மாணவர்களை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அலட்சியமாக செயல்படும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது மனித நேய மக்கள் கட்சியின் கண்டனங்கள் மற்றும் கோரிக்கை  

தமிழக அரசே சுகாதாரத்துறையே
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  தாலுக்கா நாட்டாணிபுரசக்குடி  ஊராட்சிக்கு உட்பட்ட ஆர். புதுப்பட்டினம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள் நான்கு நபர்களை வெறி நாய் கடித்ததால்  சிகிச்சைக்காக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதி

 குழந்தைகளை நாய் கடித்த உடன் அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை மீட்டு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் முதலுதவிக்காக  சேர்த்தனர் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் செவிலியர்களே முதலுதவி செய்தனர் மருத்துவரை வரவழைக்கும் படி கேட்டபோது மாலை 4 மணிக்கு மேல் மருத்துவர் வரமாட்டார் என செவிலியர்கள் கராராக சொல்லிவிட்டார்கள் இதனால் வேறு வழியின்றி  பாதிக்கப்பட்ட குழந்தைகளை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்  

நான்கு குழந்தைகள் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட போது கூட மருத்துவமனைக்கு வராத மருத்துவர் மீதும், பல முறை கோரிக்கை வைத்தும் இந்த பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வரும் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தமிழக அரசு உரிய பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 

இப்படிக்கு
B.சேக் தாவூதீன், மாவட்ட தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி,புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments