கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (2024-2026)!கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாஅத் நிர்வாகம் நேற்று 05/07/2024 தேர்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த 16/07/2021 அன்று புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து, புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்காக பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டநிலையில் நேற்று 05/07/2024 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிய நிர்வாகத்தை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தினை ஒருங்கிணைத்த பாப்புலர் பள்ளி தாளாளர் முகமது யூசுப் அவர்கள் அனைவரையும் வரவேற்று புதிய நிர்வாகத்திற்கான பைலாவை முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து S.R.M.சேக் பரீத் மற்றும் பாவா மரைக்காயர் ஆகியோரின் தலைமையில் கும்பகோணம் அல்-வின்னர் வர்த்தக சங்கத்தினர் உட்பட 30 பேர் கொண்ட குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை செய்தனர்.

ஆலோசனையின் அடிப்படையில் ஊர் மக்கள் மத்தியில் சபையில் எழுந்து நின்று ஒருங்கிணைப்பாளர் யூசுப் அவர்கள் ஏழு பேர் கொண்ட ஜமாஅத் நிர்வாகிகளின் பெயர்களை முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து அல்-வின்னர் வர்த்தக சங்கத் தலைவர் முஜிபு ரஹ்மான் அவர்கள் ஜமாஅத் நிர்வாக குழுவினர்களை ஆய்வு செய்வதற்கு 11 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரின் பெயர்களை முன்மொழிந்தார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜமாத் நிர்வாகத்தின் கால அளவு இரண்டு ஆண்டுகள் எனவும் குறிப்பிட்டார்.

ஆலோசனையின் முடிவில் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட ஏழு பேர் கொண்ட ஜமாத் நிர்வாகிகளும், பதினோரு பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர்களும் பொதுமக்கள் மத்தியில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தில் ஊரில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிரதிநிதி என்ற அடிப்படையிலும், நிர்வாக குழுவில் மது, சூது போன்ற தீய பழக்கம் கொண்டவர்கள் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் தற்போதைய புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிர்வாகத்தில் இளைஞர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவினர்கள் அவனைவருடைய பணிகள் சிறக்க GPM மீடியா மற்றும் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடற்கரை பகுதியில் நல்ல செயல்கள் மூலம் ஒரு முன்னோடி ஊராக உயர்த்திடவும், பொது இடங்களை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும், ஊரில் மலைபோல் குவிந்து கிடைக்கும் குப்பைகளை அகற்ற வழிவகை செய்து சுகாதாரமான சுற்றுசூழலை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த முறை இரண்டு தலைவர்கள் தேர்வு செய்த நிலையில், தற்பொழுது ஒற்றை தலைமை கொண்டு இரண்டு துணைத் தலைவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜமாத் நிர்வாகத்தினர் மற்றும் உயர்மட்ட நிர்வாக குழுவினர் விபரம்:

ஜமாத் நிர்வாகிகள்:

தலைவர்: R.S.M.அன்சாரி, செயலாளர்: S.முகமது இபுராஹிம், பொருளாளர்: மு.மு.பசீர் அலி, துணைத் தலைவர்: R.M.A.நெய்னா முகமது, துணைத் தலைவர்: R.அப்துல் காதர், துணைச் செயலாளர்: S.செய்யது முகமது, இணைச் செயலாளர்: A.முஷ்தாக் அகமது

உயர்மட்ட நிர்வாக குழுவினர்

O.S.M.முகமது அலி ஜின்னா, J.முகமது யூசுப், M.ராஜா முகமது, V.E.உமர் ஹத்தா, V.M.உமர், K.M.S.ஜின்னா, A.அலி அக்பர், K.S.அப்பாஸ் கான், மங்களம் சாதிக் பாட்சா, R.ருக்னுதீன், Y. ஜகுபர்

முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்)

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்.” (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.

“அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே.”(புகாரி,முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.

தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். “மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)

தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். “இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்” (ஷூரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)

நிர்வாக குழுவினர் புகைப்படம்

தலைவர்: R.S.M. அன்சாரி

செயலாளர்: S. முகமது இபுராஹிம்

பொருளாளர்: மு.மு. பசீர் அலி

துணைத் தலைவர்: R. அப்துல் காதர்

துணைத் தலைவர் R.M.A.நெய்னா முகமது

துணைச் செயலாளர் S. செய்யது முகமது

இணைச் செயலாளர் A. முஸ்தாக் அகமது

பிற புகைப்படங்கள்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments