அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்




அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

விடுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 52 பள்ளி மாணவ- மாணவிகள் விடுதிகள் மற்றும் 5 கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் விடுதி என மொத்தம் 58 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2024-2025-ம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் சேர்க்கை பெற பள்ளிகளில் பயிலும் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த விடுதியில் சேரலாம்.

மதிப்பெண்கள் அடிப்படை

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிறவகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.

பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி இலவசமாக வழங்கப்படும். இந்த விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆவணங்கள்

விடுதிக்கும் மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். 5 கிலோ மீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நன்னடத்தை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிற 9-ந் தேதிக்குள் முதற்கட்ட மாணவர்கள் தேர்வு பணியினை மேற்கொள்வதற்கு வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments