கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய 10 & 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு 2023 - 2024 ஆம் ஆண்டில் கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா மற்றும் அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவினை அறக்கட்டளையின் தலைவர் A.இஸ்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இவ்விழா தேசியகீதத்தை அடுத்து ஜனாப். மலிக்குஜ்ஜமான் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
மேலும் விழாவின் நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இஸ்மாயில், சாதிக், நைனா முஹம்மது மரைக்காயர், காந்தி சுப்ரமணியன், தௌலத் அலி ஆகியோர் மாணாக்கர்களை உற்சாகபடுத்தி பேசினர்.
அதனைத்தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அறக்கட்டளை அலுவலகத்தை ஜனாப் பஷீர் அலி ஆலிம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அறக்கட்டளையின் பொருளாளர் இஸ்ஹாக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் கட்டுமாவடி ஜமாஅத்தார்கள், கிராம நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியில் அறக்கட்டளையின் செயலாளர் சைபுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவினை க.சண்முகவள்ளி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.