மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்




ஆவுடையார்கோவில் தாலுகாவில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியுடன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கூத்தபெருமாள் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து, மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆவுடையார்கோவில் தாலுகாவில் உத்தரவாதம் கொடுத்த இடத்தில் குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் வீரையா, சி.ஐ.டி.யு. மாணிக்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments