‘‘பருவமழைக்கு முன்பாக குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடையும்’’ கலெக்டர் தகவல்




பருவமழைக்கு முன்பாக குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடையும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

கவிநாடு கண்மாய்

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கருவேலமரங்களை அகற்றி தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கவிநாடு கண்மாய் மாவட்டத்தில் அதிக ஏக்கர் பரப்பளவை கொண்ட பெரியகண்மாய் ஆகும். இதில் 700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெறுகிறது. இன்னும் 15 நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும்.இந்த பணியின் மூலம் கண்மாயை சுற்றியுள்ள 21 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் தேவை பூா்த்தியாகும். கண்மாயில் 3 மணல் குன்றுகள் மற்றும் கரைப்பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பனை மர விதைகளை நடவும் தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தூர்வாருதல்

மாவட்டத்தில் ஏரி, குளங்களை தூா்வாரும் பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பருவ மழைக்கு முன்பே குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடையும். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் பகுதியில் 50 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்த பகுதிகளில் ஏரிகள் தூர்வாரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கனிமொழி, உதவி செயற்பொறியாளர் லதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments