புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




 புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

காரைக்குடி - செட்டிநாடு - திருமயம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக

இன்று(09/07/24) முதல் 31/07/24 வரை (ஞாயிறு மற்றும் 17/07/24 மொஹரம் பண்டிகை நாளை தவிர)06829/திருச்சி - காரைக்குடி பயணிகள் வண்டி( திருச்சியில் இருந்து தினசரி காலை 10:15 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 11:00 மணிக்கு வந்து காரைக்குடி மதியம் 12:10 மணிக்கு செல்லும் வண்டி)
04 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக  திருச்சியில் மதியம் 02:30 மணிக்கு புறப்படும் மேலும் இந்த புதுக்கோட்டைக்கு மதியம் 03:20 மணிக்கும் காரைக்குடிக்கு மாலை 04:15 -4:30 மணிக்குள் காரைக்குடி செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கரூர் - திருச்சி, விழுப்புரம் - திருச்சி, மயிலாடுதுறை - சேலம், மன்னார்குடி - திருச்சி வண்டிகள் மூலம் திருச்சி வந்து இரயில் மாறி
 புதுக்கோட்டை வருவதற்கு இந்த திருச்சி - காரைக்குடி வண்டிக்கு இணைப்பு கிடைக்காது. 

அதே நேரத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை & மயிலாடுதுறை - செங்கோட்டை வண்டிகளுக்கு இருமார்களிலும் திருச்சியில் இணைப்பு கிடைக்கும். அதாவது மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டை வருவதற்கு செங்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை வருவதற்கும்  திருச்சியில் இருந்து மதியம் 02:30 மணிக்கு புறப்படும் இந்த காரைக்குடி வண்டிக்கு இணைப்பு கிடைக்கும்.

நேற்று (09/07/24) 06829/திருச்சி - காரைக்குடி பயணிகள் வண்டி திருச்சியில் இருந்து மதியம் 02:30 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மதியம் 03:23 மணிக்கு வந்து காரைக்குடிக்கு மாலை 04:16 மணிக்கு சென்றுள்ளது. 

குறிப்பு: வரும் 31/07/24 வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காரைக்குடி - திருமயம் இடையே நடைபெறும் பணிகள் காரணமாக இந்த ரயில் இவ்வாறு திருச்சியில் இருந்து காலை 10:15 மணிக்கு பதில் 04.15 மணி நேரம் தாமதமாக திருச்சியில் இருந்து மதியம் 02:30 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments