புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு உள்பட 17 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தினர் கூறுகையில், "மதுபானம் விற்பனை உள்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் போலீசார் சிலர் தொடர்பு வைத்திருப்பதாக உயர் அதிகாரிக்கு தகவல் வந்தது. அவர்களிடம் போலீசார் பணம் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதும், இதேபோல போலீஸ் நிலையங்களுக்கு புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், பணம் கேட்டல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து உயர் அதிகாரியின் கவனத்திற்கு வந்தது. அதன்பேரில் 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவில் 17 பேர் கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கே.புதுப்பட்டி, அன்னவாசல், விராலிமலை, ஆலங்குடி, மீமிசல், திருப்புனவாசல், இலுப்பூர் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறவர்கள் ஆவார்கள். போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும், மாவட்டத்தில் இதேபோல ஏதேனும் புகார் வந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றிய விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.