ஏம்பக்கோட்டை மதரஸா ரஹூமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் (ஜூலை.20) திருமண பயிலரங்கம் (நிக்காஹ் கவுன்சிலிங்) நிகழ்வு!




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா  மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை  கிராமத்தில் உள்ள மதரஸா ரஹூமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் எதிர்வரும் 20/07/2024 சனிக்கிழமை அன்று திருமண பயிலரங்கம் (நிக்காஹ் கவுன்சிலிங்) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்நிகழ்வில், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாமும், சென்னை ஆலிம் பப்ளிகேஷனில் தப்ஸீர், ஹதீஸ் மொழி பெயர்ப்பாளருமான  மௌலவி, ஹாபிழ்  அல்ஹாஜ் S.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A  M.PHIL.. அவர்கள்  கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

அதில் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் இளைஞர்களுக்கும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும், பெண்களுக்கு  மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையும்  கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

அந்நிகழ்வில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் 88832861170, 8124813976 என்ற அலைபேசி எண்களிலும், பெண்கள் 8870040880, 8122533063 என்ற எண்களிலும் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளவும் அந்நிகழ்வில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் பங்கு பெறலாம்.

தகவல்:
மௌலவி, பாஜில், காரி, அல்ஹாஜ் J.முகமது மைதீன் தாவூதி, முதல்வர், மதரஸா ரஹூமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி, ஏம்பக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments