புதுக்கோட்டையில் ‘என்கவுண்ட்டர்’ சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி சுட்டுக்கொலை போலீசார் அதிரடி நடவடிக்கை புதுக்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடியை, போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேடுதல் வேட்டை

இதையடுத்து போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே தைல மர காட்டுப்பகுதியில் துப்பாக்கியுடன் 2 பேர் பதுங்கியிருப்பதாக ஆலங்குடி போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தையன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உள்பட போலீஸ்படையினர் அந்த காட்டுப்பகுதிக்கு சென்று, தேடுதல் வேட்டை நடத்தினர்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு வெட்டு

அப்போது அங்கு சுற்றித்திரிந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஒருவர் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இதில் அந்த குண்டு யார் மீதும் படவில்லை.

இருப்பினும் போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அந்த நபர், தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் போலீசாரை தாக்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்திற்கு வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால், அந்த நபரை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் ஒரு தோட்டா அந்த நபரின் இடது காலிலும், மற்றொரு தோட்டா மார்பு பகுதியிலும் புகுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த நபர் உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்ற துரைசாமி (வயது 42) என்பது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் முத்தையன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அதன்பின் திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பட்டாக்கத்தி வெட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கி பறிமுதல்

தகவல் அறிந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்களை, புகைப்படம், வீடியோ எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனிடையே தடயவியல் போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை வைத்திருந்த துப்பாக்கி, பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபல ரவுடி

சுட்டுக் கொல்லப்பட்ட துரை பிரபல ரவுடி ஆவார். அவர் மீது 4 கொலை வழக்குகள், கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட 64 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியல் கொண்ட குற்ற சரித்திர பதிவேட்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கொலை வழக்கில் ரவுடி துரையின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி துரையின் உறவினர்கள், குடும்பத்தினர் நேற்று இரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

கடும் நடவடிக்கை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கிற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்ற துரைசாமி (வயது 42) என்பது தெரியவந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் முத்தையன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அதன்பின் திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பட்டாக்கத்தி வெட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கி பறிமுதல்

தகவல் அறிந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்களை, புகைப்படம், வீடியோ எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனிடையே தடயவியல் போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரை வைத்திருந்த துப்பாக்கி, பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபல ரவுடி

சுட்டுக் கொல்லப்பட்ட துரை பிரபல ரவுடி ஆவார். அவர் மீது 4 கொலை வழக்குகள், கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட 64 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியல் கொண்ட குற்ற சரித்திர பதிவேட்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கொலை வழக்கில் ரவுடி துரையின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி துரையின் உறவினர்கள், குடும்பத்தினர் நேற்று இரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

கடும் நடவடிக்கை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கிற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments