புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரெயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும்.மன்னர் கள் காலத்திலே தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையத்தில் புதுக் கோட்டை-திருச்சி இடையே ரெயில் பாதை கடந்த 1929-ம் ஆண்டில் தொடங் கப்பட்டது. அதன்பின் 1930-ம் ஆண்டு மானாம துரை வழித்தடம் திறக்கப்பட்டது.
தற்போது திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் முக்கியமான ரெயில் நிலையமாக புதுக்கோட்டை திகழ்கிறது. அகல ரெயில் பாதையில் மின்மயமாக் கப்பட்டு ரெயில்கள் இயக்கப்படுகிறது. புதுக் கோட்டை வழியாக வட மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, ராமேசுவரம், தென்மாவட்டங் கள் உள்ளிட்ட இடங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
திட்ட மதிப்பீடு
புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே ரெயில் பாதை அமைப்பதற்காக கடந்த 2012-13-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியா னது. கந்தர்வகோட்டை வழியாக 65 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டன.இதற்கான |ஆய்வுகளும் நடைபெற்று திட்ட மதிப்பீடு அப்போது கணக்கிடப்பட்டது.
இதில் சுமார் ரூ.619 கோடி வரை செலவாகும் என திட்ட மதிப்பீடு கடந்த 2016-ம் ஆண்டு தயா ரிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் நிதிகள் ஒதுக்குவது மற்றும் இத்திட்டம் தொடர்பாக அடுத்தக் கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பின் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ரெயில்வே நிர்வாகம்
சமீபத்தில் நடந்து முடிந்தநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினர் இத்திட் டத்தை கையில் எடுத்து புதுக்கோட்டை-தஞ்சா வூர் ரெயில் பாதை திட்டம் கொண்டு வரப்படும் என்றனர்.
இத்திட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து மத்திய அரசிட மும், ரெயில்வே நிர்வாகத்திடமும் வலியுறுத்தி இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இத்திட் டம் நிறைவேறினால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் மார்க்கத்தில் ரெயில்களில் பயணிகள் பயணம் செய்யமுடியும். மேலும் கூடுதல் ரெயில் சேவையும் கிடைக்கும்.
பயண நேரம் குறையும்
ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழி யாக சென்னைக்கு இயக்கப்படும் ஒரு சில ரெயில் கள் திருச்சி சென்று, அங்கிருந்து தஞ்சாவூர் சென்றுசெல்கிறது. இந்தபுதியபாதை அமைந்தால் புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக தஞ்சாவூர் வழியாக ரெயில்கள் இயக்கப்படும்.
இதன் மூலம் பயண நேரம் குறையும். எனவே கிடப்பில் போடப்பட்ட புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்டம் புத்துயிர் பெறுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.