மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்றல் மையம் தொடங்கிய நிகழ்வு




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு சண்முகம் அய்யா அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி  - புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 50 மையங்களில் தொடங்கப்பட்டது.

மணமேல்குடி  ஒன்றியத்திற்கு உட்பட்ட வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையத்தினை மணமேல்குடி   வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திருமதி தேவி அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்  சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்  திரு இளையராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். 

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது . 

கற்றல் மையமானது  பள்ளிகள் சமுதாயக்கூடம் 100 நாள் வேலை திட்ட பணித்தளம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மையங்கள் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

 இதில் கற்போர் வசதிக்கேற்ப கற்றல் மையம் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் கற்போருக்கு எழுத்துக்களை அடையாளம் காணுதல், எண்களை அடையாளம் காணுதல், எழுத படிக்க வாசிக்க , பெயர் எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள்  பெயர்கள் எழுதுதல், ஊர் பெயர் எழுதுதல் மற்றும் கையெழுத்து போட கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர் திருமதி முத்து காளியம்மாள் 
 நன்றியுரை கூறினார்.

 ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் பன்னீர்செல்வம்  மற்றும் ஆசிரியர்கள் இளையராஜா முத்து துரை முத்து காளியம்மாள் மாரிமுத்து காந்தி மற்றும்  முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments