கோபாலப்பட்டிணத்தில் ஆஷூரா நோன்பை முன்னிட்டு ஜமாஅத் சார்பாக இரண்டு நாட்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் .




கோபாலப்பட்டிணத்தில் ஆஷூரா நோன்பை முன்னிட்டு ஜமாஅத் சார்பாக இரண்டு நாட்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் ஆஷூரா நோன்பை முன்னிட்டு நாளை  16/07/2024 & நாளை மறுநாள் 17/07/2024  பெரிய பள்ளிவாசல் வளாகத்தில நோன்பு கஞ்சி வழங்க உள்ளனர். எனவே ஊர் மக்கள் அனைவரும் நோன்பு கஞ்சி வாங்க வரும்படி ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


"ஆஷுரா நோன்பின்  சிறப்பு"

*ரமழானுக்குப் பின்  நோன்பு வைக்க சிறந்த காலம், முஹர்ரம் மாதம்*

நபி (ஸல்) அவர்கள் ‘ரமழான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு *அல்லாஹ்வுடைய மாதமாகிய* முஹர்ரத்தின் நோன்பாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூ ஹூரைரா(ரழி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1163

"ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து *அல்லாஹ்வின் தூதரே! ரமழான் மாதத்துக்கு பிறகு எந்த நோன்பு சிறந்ததாக இருக்கிறது? என்று கேட்டார்.அதற்கு நபி அவர்கள் "எந்த மாதத்தை நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுடைய மாதத்தில் நோற்கப்படக்கூடிய நோன்பாகும்"* என்று பதிலளித்தார்கள்"

அறிவிப்பவர்:அபூ ஹூரைரா (ரழி) 
நூல்: இப்னு மாஜா

*முஹர்ரம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் ஆஷூரா என்று விழிக்கப்படுகிறது*

அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும் 

*அந்த நாளில் வைக்கப்படும் நோன்புக்கு நற்கூலி என்ன*?

*ஆஷுரா தினத்தில் நோற்கப்படும் நோன்பை அல்லாஹுத் தஆலா கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவதை நான் ஆதரவு வைக்கின்றேன்* என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பவர்:அபூ கதாதா (ரழி)   நூல்:ஸுனன் அத்திர்மிதி : 752

# ஆக முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நோன்பு வைத்தால் அது சென்றுவிட்ட ஒரு வருட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது

*ஆஷூரா நோன்பு ஏன்?எதற்கு?*

# நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் *ஆஷுரா நாளில்* நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள், ‘‘இது நல்ல நாள். (மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்) பின்பற்றியவர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹுத்தஆலா காப்பாற்றிய நாளாகும். இதற்காக இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘உங்களைவிட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மிகவும் தகுதியானவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள் 

அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி) நூல்:ஸஹீஹுல் புகாரி : 2004)

*நபியவர்கள் இந்த நோன்புக்கு கொடுத்த முக்கியத்துவம்*

# ஆஷுரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமழான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதனையும் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை 

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரழி) 
நூல்:ஸஹீஹுல் புகாரி : 2006)

*முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்*

# நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழி 
நூல்:ஸஹீஹ் முஸ்லிம் : 1134)

# ஆகவே இந்த மாதத்தின் 9 மற்றும் 10வது நாள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கின்றது 

குறிப்பு: #விரும்பியவர் வைத்துக் கொள்ளலாம் விரும்பியவர் விட்டுவிடலாம் நிர்பந்தம் இல்லை.நோன்பு வைத்தால் மேற்சொல்லப்பட்ட மாபெரும் நன்மையை பெறுவார் இல்லையென்றால் அந்த நன்மையை இழப்பார்

நோன்பு வைப்பவர்கள் இந்த இரண்டு நாட்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை  செய்வானாக!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments