சாத்தியடி கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தியடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குறுக்கு சாலை வழியாகத்தான் அப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டு வீசிய பலத்த காற்று காரணமாக மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் தாழ்வாக சென்றன. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அந்த ஒயர்களை கயிறு மூலம் கட்டி வைத்தனர். அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments