புதுக்கோட்டை வழியாகவும் சென்னை பெரம்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் புவனேஸ்வர், வழியாக திருநெல்வேலி - கொல்கத்தா சாலிமர் இடையே இரண்டு வாரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு




நெல்லையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே உள்ள ஷாலிமாருக்கு சிறப்பு ரெயில் இரு மார்க்கத்தில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 25-ந் தேதி ரெயில் (வண்டி எண் 06087) அதிகாலை 1.50 மணி அளவில் புறப்படும். அன்றைய தினம் புதுக்கோட்டைக்கு அதிகாலை 6.38 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்படும். இதேபோல மறுமார்க்கத்தில் ஷாலிமாரில் இருந்து ரெயில் (வண்டி எண் 06088) வருகிற 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை அதாவது 21, 28-ந் தேதிகளில் அதிகாலை 6.28 மணிக்கு வந்து 6.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு வருகிற வழியில் புதுக்கோட்டையிலும் நின்று செல்வதால் புதுக்கோட்டை பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி கொள்ள முடியும். திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments