ECR சாலையில் தொடர் விபத்து-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை




ECR சாலையில் தொடர் விபத்து-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை: சேதுபாவாசத்திரம் அருகே சாலையில் ஏற்ப்பட்ட பள்ளத்தை சரிசெய்ய அமைக்கப்பட்ட வேகத்தடையால் அப்பகுதியில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

பள்ளத்தை சரிசெய்து வேகத்தைடையை  நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சாலையில் ஏற்ப்பட்ட பள்ளத்தை சரிசெய்ய அமைக்கப்பட்ட வேகத்தடையால் அப்பகுதியில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
பள்ளத்தை சரிசெய்து வேகத்தைடையை  நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சேதுபாவாசத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம்-தூத்துக்குடி இடையே 332 கி.மீ நீளமுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை ரூ.7000 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

நெடுஞ்சாலைத்துறை: நாகப்பட்டினம்-தூத்துக்குடி பிரிவு (NH-32), கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக செல்கிறது சென்னையில் இருந்து தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 32 (NH-32)ஐ அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) துரிதமாக இறங்கி உள்ளது.

நாகப்பட்டினம் - தூத்துக்குடி சாலை 

நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை சுமார் 320 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரம் கிராமங்கள் உள்ளன.  பல்வேறு வழிப்பாட்டு & சுற்றுலா தலங்கள் முக்கியமான ஊர்களும் அமைந்துள்ளது.

மேலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் கார்களிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட வியாபார பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

சேதுபாவாசத்திரம் அருகே புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் ECR சாலையில் செல்பவர்கள் கவனமாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சேதுபாவாசத்திரம்-காரங்குடா இடையேயான ECR சாலையில் உள்ள சிறிய கால்வாய் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சேதுபாவாசத்திரம் அருகே சாலையில் ஏற்ப்பட்ட பள்ளத்தை சரிசெய்ய அமைக்கப்பட்ட வேகத்தடையால் அப்பகுதியில் அதிகரிக்கும் சாலை விபத்துகள் பள்ளத்தை சரிசெய்து வேகத்தைடையை  நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments