தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே மோட்டார் சைக்சிள் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாய் மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தாயார் வீட்டுக்கு...
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள விக்ரமம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர், வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா(வயது 30). இவர்களது மகன்கள் மோனிஷ்(9), மவுனிஷ்(6).
இவர்களில் மோனிஷ்சுக்கு வயிற்றில் சொருகல் விழுந்ததால் அதை எடுப்பதற்காக நேற்று காலை மன்னார்குடியை அடுத்த பைங்காநாட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ஸ்கூட்டரில் ராதிகா தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மோதல்
மதுக்கூர் மன்னார்குடி சாலையில் கீழக்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்று கொண்டு இருந்த தனியார் பஸ்சை ராதிகா முந்தி செல்ல முயன்று உள்ளார்.
அதே நேரத்தில் பைங்காநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடைய மகன் விக்னேஷ்(18) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
இந்த விபத்தில் ராதிகா அவரது மகன் மோனிஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோதிய வேகத்தில் இருவரது இருசக்கர வாகனங்களும் உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
தாய் மகன் உள்பட 3 பேர் இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.