சென்னை மாநகரின் மூன்றாவது முக்கிய ரயில்வே ஜங்க்ஷனான தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கப்படவுள்ளன. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை திட்டமிடப்பட்ட முக்கியமான பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தாம்பரம் யார்டை ஒரு விரிவான மாற்றியமைக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சில எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும், சில ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது!
முக்கிய பணிகளுக்காக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
மறுவடிவமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல ரயில் சேவைகளை ரத்து செய்தல், பகுதியளவு ரத்து செய்தல் மற்றும் திசைதிருப்புதல் உள்ளிட்ட செயலூக்கமான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாம்பரம் யார்டு மறுவடிவமைப்பு பணிக்காக தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 20691), நாகர்கோவில்-தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (20692) உள்ளிட்ட இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூலை 23 முதல் 31 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டுவில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்
இதேபோல் 19 ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாகவும், தொடங்கும் ரயில் நிலையங்களில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி ராக்கெட் எக்ஸ்பிரஸ் (12653) மற்றும் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12606) ஆகியவை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இயக்கப்பட்டு நிறுத்தப்படும். இந்த மாற்றங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை அமலில் இருக்கும்.
எழும்பூரில் நிறுத்தப்படும் ரயில்கள்
இதேபோல், தாம்பரம்-நியூ டின்சுகியா எக்ஸ்பிரஸ் (15929), ஜசிதிஹ்-தாம்பரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12376), தாம்பரம்-ஜசிதிஹ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12375), தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (2265) நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22658), தாம்பரம்-சந்த்ராகாச் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (22842), நியூ தின்சுகியா-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (15930), சில்காட் டவுன்-தாம்பரம் நாகான் எக்ஸ்பிரஸ் (15630) மற்றும் தாம்பரம்-சில்காட் எக்ஸ்பிரஸ் (1529) உள்ளிட்ட ஏழு ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு நிறுத்தப்படும்.
வேறு நிலையங்களில் நிறுத்தப்படும் ரயில்கள்
ஜூலை 21ம் தேதி பிகானீர்-மதுரை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22632) எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களை புறக்கணித்து பெரம்பூரில் நிறுத்தப்படும். எழும்பூர்-சேலம் அதிவிரைவு (22153) எழும்பூரை புறக்கணித்து சென்னை கடற்கரை வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 23 முதல் 31 வரை இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருப்பிவிடப்பட்டுள்ள ரயில்கள் என்னென்ன?
புதுச்சேரி-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் (22403) மற்றும் ராமேஸ்வரம்-பனாரஸ் வாராந்திர சூப்பர் பாஸ்ட் (22535) ஜூலை 24 முதல் 31 வரை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் வழியாக திருப்பி விடப்படும். திருச்சி-பகத் கி கோத்தி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20482) மற்றும் லோகமான்யதிலக்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (11017) ஜூலை 27 அன்று திருப்பி விடப்படும். மண்டபத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம்-அயோத்தி கன்டோன்மென்ட் சிரத்தா சேது சூப்பர்பாஸ்ட் ரயில் (22613) ஜூலை 28-ம் தேதி எழும்பூர் வழியாக செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக திருப்பி விடப்படும்.
வேற லெவலில் தயாராகும் தாம்பரம் ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் முனையத்திற்கு பிறகு சென்னையில் ஒரு பெரிய முனையம் என்றால் அது தாம்பரம் தான். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு மக்கள் அதிக அளவில் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனால், ரூ.1000 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.