மீமிசல் - ஆவுடையார்கோவில் சாலையில் காசியார்மடம் அருகே புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்து பெண் ஒருவர் பலி. மூன்று பேர் படுகாயம்.




மீமிசல் - ஆவுடையார்கோவில் சாலையில் காசியார்மடம் அருகே புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்து பெண் ஒருவர் பலியானார் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் 

இன்று காலை 11.30 மணியளவில் அமரடக்கி கிராமத்தில், காசியார்மடம் அருகில் ஆவுடையார்கோவில் - மீமிசல் செல்லும் சாலையில்  புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 நபர்கள் பயணம் செய்த இன்டிகோ கார் (TN63 AV 4327) சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி சாலை விபத்து ஏற்பட்டது. 

இவ்விபத்தில் காரில் வந்த பெண் (வயது 55/2024) சம்பவ இடத்தில் இறந்துவிட்டார்.  

விபத்தில் காயமுற்ற மற்ற 3 நபர்களை 108 ஆம்புலென்ஸ் வாகனத்தில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

புதுக்கோட்டை டவுன் காமராஜபுரம் அருகில் உள்ள பாரதி நகரில் வசிக்கும் அட்வகேட் பாரூக் அலி சென்ற கார் ஆவுடையார் கோவில் அருகில்  விபத்துக்குள்ளாகி விட்டது இவரது தாயார் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments