அறந்தாங்கி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்; டிரைவர் காயம்




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து விச்சூர், ஆவுடையார்கோவில் வழியாக அரசு பஸ் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு செட்டிவயல் கிராமத்தில் வந்த போது மர்மநபர்கள் 3 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லை எரிந்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பஸ் டிரைவர் சுந்தரம் (வயது 47) காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments