புதுக்கோட்டை 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புத்தகங்களுடன் வலம் வரும் அரசு பேருந்து மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை




புதுக்கோட்டை 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புத்தகங்களுடன் வலம் வரும் அரசு பேருந்து 23-07-2024 அன்று மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தது. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்களோடு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து.இன்று நமது பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தது, மாணவர்கள் ஆர்வமுடன் பேருந்திருக்குள் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை பார்வையிட்டனர். பேருந்தில் உள் மற்றும் வெளிப்புறத்தில் புதுக்கோட்டையில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா தொடர்பான புகைப்படங்கள் இடம் பெறும்படி செய்யப்பட்டிருந்தது, மேலும் நடைபெற உள்ள ஏழாவது புத்தகத் திருவிழா குறித்தும் தகவல்களும் இடம்பெற்றிருந்தது, நிறைவாக பேருந்து அருகில் நின்று மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments