ஆவுடையார்கோவில் அருகே அரசு கல்லூரி கவுர விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தமிழ் துறை பேராசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கணேஷ் குமார் தலைமை வகித்தார்.


ஆர்பாட்டத்தில் 3 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மாநில குழு பரிந்துரை மற்றும் உயர்நீதிமன்ற ஆணையின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும். நீண்ட காலமாக கல்வித் தகுதியோடு பணிபுரிந்து கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments