புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கத்தின் முதல் நிகழ்ச்சி ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, இ்்த்திட்டத்தை தொடங்கி வைத்து பிளஸ்-1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 472 மாணவிகளுக்கு ரூ.22,46,720 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2023-24-ம் கல்வியாண்டில் 17,428 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 14,718 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது'' என்றார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகம், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் ரகுபதியிடம், ராமரை குறிப்பிட்டு திராவிட மாடல் ஆட்சி பற்றி பேசியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது குறித்து பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்க முயன்ற போது, அவர் பேட்டி வேண்டாம் எனக்கூறிவிட்டு சென்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments