தஞ்சாவூர்-புதுக்கோட்டை-மதுரை இடையே புதிய ரெயில் பாதை திட்டம் நாடாளுமன்றத்தில் அப்துல்லா எம்.பி. வலியுறுத்தல்




புதுக்கோட்டை-தஞ்சாவூர்-மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இக்கோரிக்கை தொடர்பாக புதுடெல்லியில் நாடாளுமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா சிறப்பு கவன ஈா்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். அதில் தஞ்சாவூர்-புதுக்கோட்டை-மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது 100 ஆண்டு கால கனவு திட்டமாகும். தஞ்சாவூர் சுற்றுலா தலம் நிறைந்த பகுதியாக உள்ளது. புதுக்கோட்டை தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை-மதுரை ரெயில் பாதை திட்டம் நிறைவேறினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட 5 மாவட்ட பயணிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்திற்கு ரெயில்வே துறை கவனம் செலுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments