மீனவர்கள் வலையில் சிக்கிய 6 டன் ராட்சத திருக்கை மீன்கள் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது




கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று கடல் சீற்றம் காரணமாக சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குறைத்த அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அதில் கன்னியாகுமரியை சேர்ந்த 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வீசிய வலையில் 6 டன் எடை கொண்ட 10 ரட்சத திருக்கை மீன்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து உடனே அந்த விசைப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பினர். அந்த ராட்சத திருக்கை மீன்களை அவர்கள் படகில் இருந்து கிரேன் மூலம் இறக்கினர். பின்னர், ஏலக்கூடத்துக்கு அவற்றை ெகாண்டு வந்தனர். ராட்சத திருக்கை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 10 திருக்கை மீன்களும் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. பின்னர் அந்த திருக்கை மீன்களை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத திருக்கை மீன்கள் கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments