ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வேளாண் துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆனால் மின்சாரத்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு திருப்புனவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி கூறுகையில், ஏன் இந்த கூட்டத்தில் மின்சார துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதைதொடர்ந்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கூச்சலிட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், இதற்கு நான் தீர்மானம் எழுதி அவர்கள் ஏன் வரவில்லை என்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கிறேன் என்று கூறினார். 

அதன் பிறகு அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் சமரசம் அடைந்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருப்பூர் செந்தில்குமரன், பொன்பேத்தி சுந்தரபாண்டியன், அமரடக்கி சரண் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சாலைகள், குடிநீர், புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகையா நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments