புதுக்கோட்டையில் 13 புதிய பஸ்கள் சேவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்




புதுக்கோட்டையில் 13 புதிய பஸ்கள் சேவையை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

புதிய பஸ்கள்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் 13 புதிய பஸ்களின் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தனர். மேலும் 36 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

ஆலங்குடி- கோயம்புத்தூர், 
அறந்தாங்கி -மேட்டுப்பாளையம், சிதம்பரம்-மதுரை, 
தஞ்சாவூர்-மதுரை, 
காரைக்குடி- திருப்பூர், 
பட்டுக்கோட்டை-ஏர்வாடி, 
புதுக்கோட்டை- கோயம்புத்தூர், 
திருச்சி- நாகர்கோவில், 
திருச்சி- மதுரை, 
திருச்சி- மதுரை ஆகிய புறநகர் வழித்தடங்களில் 10 புதிய பஸ்களும், 

பொன்னமராவதி-திருமயம், 
புதுக்கோட்டை-வாராப்பூர், கந்தர்வகோட்டை-கறம்பக்குடி 

ஆகிய வழித்தடங்களில் 3 புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

100 மின்சார பஸ்கள்

நிகழ்ச்சியை தொடா்ந்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறுகையில், “போக்குவரத்துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பணப்பலன்கள் கொடுக்கப்படாமல் போனது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும். போக்குவரத்து கழகங்களில் புதிதாக வேலைக்கு ஆட்கள் தேர்வுக்கான பணி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும். அதுவரை பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும். பழைய மினி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு போக்குவரத்தில் 500 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளது. இதில் 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் நடைமுறையில் உள்ளது. அதன்பின் 400 மின்சார பஸ்கள் வாங்கப்படும்'' என்றார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments