மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குமரப்பன்வயல் - பாலக்குடி இடையே உள்ள பாலத்தில் தூண்களில் விரிசல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை 2008 ஆண்டு முதல் திறந்தது பயன்பாட்டில் உள்ளது இந்த சாலை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டம் வழியாக செல்கிறது.
நாகப்பட்டினம்-தூத்துக்குடி இடையே 332 கி.மீ நீளமுள்ள கநம்ம000 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
நெடுஞ்சாலைத்துறை: நாகப்பட்டினம்-தூத்துக்குடி பிரிவு (NH-32), கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக செல்கிறது சென்னையில் இருந்து தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 32 (NH-32)ஐ அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) துரிதமாக இறங்கி உள்ளது.
நாகப்பட்டினம் - தூத்துக்குடி சாலை
நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை சுமார் 320 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரம் கிராமங்கள் உள்ளன. பல்வேறு வழிப்பாட்டு & சுற்றுலா தலங்கள் முக்கியமான ஊர்களும் அமைந்துள்ளது.
மேலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் கார்களிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட வியாபார பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.
இந்நிலையில் மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குமரப்பன்வயல் - பாலக்குடி இடையே உள்ள பாலத்தில் தூண்களில் விரிசல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் சரி செய்ய கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.