கேரளாவில் பருவமழை கோர தாண்டவம் மண்ணில் புதைந்த மலைக்கிராமங்கள் வயநாடு நிலச்சரிவில் 126 பேர் பலி 500 பேர் கதி என்ன? மீட்புப்பணியில் ராணுவம்





கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் மலைக்கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலியானார்கள். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், ராணுவம் மீட்புப்பணியில் இறங்கியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

கனமழை

வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

பயங்கர நிலச்சரிவு

முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.

கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன.

ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

மண்ணில் புதைந்த கிராமங்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்கியது.

முண்டக்கை பகுதியில் மீட்பு பணிக்கு ஏற்பாடு நடந்து வந்த நேரத்தில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.

அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததாலும் அந்த பகுதி முழுவதும் மணலும், சகதியும், வெள்ளமுமாக காட்சியளித்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

ராணுவம் விரைந்தது

அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர், குன்னூர் வெலிங்டனில் இருந்து ராணுவத்தினர், திருவனந்தபுரத்தில் இருந்து மாநில மீட்பு படையினரும், 130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.

அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும் கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

126 பேர் பலி

நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட மண் குவியலில் பலர் உயிரோடு புதைந்து பலியானார்கள். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆங்காங்கே ஒதுங்கி கிடந்தன.

இதில் ஒரு குழந்தையின் உடல் புதருக்குள் கிடந்தது. அதை மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த காட்சியை பார்த்தவர்கள் கதறி அழுதனர்.

மேலும் பலரது உடல்கள் ஆங்காங்கே கிடந்தன. அவை அனைத்தும் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. நிலம்பூர் அருகே போத்துக்கல் பகுதியில் ஓடும் சாலியாற்றில் 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கரை ஒதுங்கிக்கிடந்தன.

மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 126 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

ரோக் ஷனா (வயது 35), கிரீஷ் (30), ரம்லத் (53), அஷ்ரப் (49), லெனின் (10), குன்னிமொய்தீன் (65), பிரேம லீலா, ரெஜினா, விஜிஷ் (37), ஷ்ரேயா (19), தாமோதரன் (65), கவுசல்யா, சஹானா (7), வாசு (60), ஆமினா, ஜுபைரியா (30), சரண் (20), பிரதீஷ் (38), பாரூ (63), மோகனன் (64), அனு (3), நசீமா (40), பங்கலாட்சி (75), கூடலூர் காளிதாசன் (30), விஜயன் (59), அதில் (12), ஷதி தேவி, நாராயணன் (55), பிரேமா (55), கல்யாணகுமார் (56), ரியாஷ் (10), முகமது ஈஷான் (10), ஜெகதீஷ் (45), அனஸ் (25), அம்ஷியா, அஸ்வின், அசினி (10), நபிஷா (60), ஜபீலா.

500 பேர் கதி என்ன?

நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண் குவியலால் சூழப்பட்டன. அப்பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இருப்பினும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அந்த சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வயநாடு ஆஸ்பத்திரிக்கு கோழிக்கோடு, கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து கூடுதல் டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மருந்துகளும், ஆம்புலன்சுகளும் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்

இந்த சம்பவத்தில் எத்தனைபேர் சிக்கினர் என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லாததாலும், பலரை இன்னும் காணவில்லை என்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு விரைந்தன. ஆனால் வானிலை மோசமாக இருந்ததாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தரையிறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர்கள் கோழிக்கோட்டுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் மழை குறைந்ததும் மீண்டும் ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

முதல்-மந்திரி உத்தரவு

நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்து மந்திரிகளுடன், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவரது உத்தரவின்பேரில் வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ், பிற்படுத்தப்பட்டோர் துறை மந்திரி ஓ.ஆர்.கேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்களை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

நேரில் பார்த்தவர்கள் உருக்கம்

இந்த பேரழிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிலர் தங்களின் அனுபவத்தை விவரித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து தப்பிய வயது தம்பதி இதுப்பற்றி கூறியதாவது:-

இரவு 11 மணியளவில் எங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் சேறும் சகதியுமாக ஓடுவதை கண்டு நாங்கள் அதிர்ந்துபோனோம். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த நாங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். எங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் நிலைமை குறித்து எச்சரித்து எங்களுடன் வரும்படி கூறினோம். ஆனால் எங்களுடன் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் நள்ளிரவில் உங்களுடன் வந்து சேர்ந்துகொள்கிறேன் எனக்கூறி எங்களை அனுப்பிவிட்டார். அதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலையில் தஞ்சம் அடைந்தோம். காலை வரை நாங்கள் அங்கேயே இருந்தோம். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது எங்கள் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.

இவ்வாறு அந்த தம்பதி கூறினர்.

பச்சிளம் குழந்தையுடன் மாயம்

நிலச்சரிவில் உயிர் தப்பிய ஒரு பெண் கூறும்ேபாது, “எனது உறவுக்கார பெண் இரவில் செல்போனில் என்னை அழைத்தார். அவர்கள் இருக்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து தப்பி வர முயற்சிப்பதாகவும் என்னிடம் கூறினர். அவர்களிடம் ஒரு பச்சிளம் குழந்தையும் இருந்தது. அதன் பிறகு, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை” என அழுது கொண்டே கூறினார்.

அஸ்வின், அசினி (10), நபிஷா (60), ஜபீலா.

500 பேர் கதி என்ன?

நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண் குவியலால் சூழப்பட்டன. அப்பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இருப்பினும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அந்த சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வயநாடு ஆஸ்பத்திரிக்கு கோழிக்கோடு, கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து கூடுதல் டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மருந்துகளும், ஆம்புலன்சுகளும் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்

இந்த சம்பவத்தில் எத்தனைபேர் சிக்கினர் என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லாததாலும், பலரை இன்னும் காணவில்லை என்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு விரைந்தன. ஆனால் வானிலை மோசமாக இருந்ததாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தரையிறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர்கள் கோழிக்கோட்டுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் மழை குறைந்ததும் மீண்டும் ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

முதல்-மந்திரி உத்தரவு

நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்து மந்திரிகளுடன், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ், பிற்படுத்தப்பட்டோர் துறை மந்திரி ஓ.ஆர்.கேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்களை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

நேரில் பார்த்தவர்கள் உருக்கம்

இந்த பேரழிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிலர் தங்களின் அனுபவத்தை விவரித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து தப்பிய வயது தம்பதி இதுப்பற்றி கூறியதாவது:-இரவு 11 மணியளவில் எங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் சேறும் சகதியுமாக ஓடுவதை கண்டு நாங்கள் அதிர்ந்துபோனோம். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த நாங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். எங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் நிலைமை குறித்து எச்சரித்து எங்களுடன் வரும்படி கூறினோம். ஆனால் எங்களுடன் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் நள்ளிரவில் உங்களுடன் வந்து சேர்ந்துகொள்கிறேன் எனக்கூறி எங்களை அனுப்பிவிட்டார். அதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலையில் தஞ்சம் அடைந்தோம். காலை வரை நாங்கள் அங்கேயே இருந்தோம். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது எங்கள் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.

இவ்வாறு அந்த தம்பதி கூறினர்.

பச்சிளம் குழந்தையுடன் மாயம்

நிலச்சரிவில் உயிர் தப்பிய ஒரு பெண் கூறும்ேபாது, “எனது உறவுக்கார பெண் இரவில் செல்போனில் என்னை அழைத்தார். அவர்கள் இருக்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து தப்பி வர முயற்சிப்பதாகவும் என்னிடம் கூறினர். அவர்களிடம் ஒரு பச்சிளம் குழந்தையும் இருந்தது. அதன் பிறகு, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை” என அழுது கொண்டே கூறினார்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments