``தமிழ் புதல்வன்” திட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ``தமிழ் புதல்வன்” திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, கல்லூரி பொறுப்பு அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ``தமிழ் புதல்வன்” திட்டம் ஆகஸ்டு மாதம் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், 75 கல்லூரி பொறுப்பு அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதிய வங்கி கணக்கு தொடங்குதல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் வகையில், வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்குதல், வங்கிக் கணக்கு ஏற்கனவே இருக்கிற மாணவர்களுக்கு ஆதார் அட்டை இணைப்பதற்கான முகாமினை நடத்துதல், தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கல்லூரி பொறுப்பு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, முதன்மைக்கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தக்குமார், கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.