வக்கீலாக பதிவு செய்ய சட்டப்படிப்பு படித்தவர்களிடம் மாநில பார் கவுன்சில்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 மனுக்கள்
சட்டப்படிப்பு படித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்வதற்கு மாநில பார் கவுன்சில்கள், நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சில வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
போதிய நிதிவசதி இல்லாத சட்டம் படித்த இளைஞர்கள், வக்கீல் தொழில் செய்யும் வாய்ப்பை இது தடுப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இப்படி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.
விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 22-ந்தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
68 பக்க தீர்ப்பு
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று இவ்வழக்கில் 68 பக்க தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
1961-ம் ஆண்டின் வக்கீல்கள் சட்டப்படி, சட்டப்படிப்பு முடித்த பொதுப்பிரிவினரிடம் வக்கீலாக பதிவு செய்ய ரூ.750-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரிடம் ரூ.125-ம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வசூலிக்க மாநில பார் கவுன்சில்களுக்கோ, பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கோ அதிகாரம் இல்லை.
ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை கட்டணம் வசூலிப்பது, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு வலியுறுத்தும் சமத்துவ உரிமைக்கு எதிரானது.
தடைக்கல்
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வக்கீல் ஆவதற்கு தடைக்கல்லாக அமைந்துவிடும். அவர்கள் மீது பாரபட்சம் காட்டுவதாக அமையும். நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட நிதிக்கொள்கையை பார் கவுன்சில்கள் மாற்ற முடியாது. இருப்பினும், ஏற்கனவே வசூலித்த அதிகப்படியான கட்டணத்தை மாநில பார் கவுன்சில்கள் திருப்பித்தர வேண்டியது இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.