மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய வாரம் இருமுறை ரயில் இயக்கம் (BI WEEKLY) தெற்கு ரயில்வே அறிவிப்பு




கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலரும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாகவும் தொழில் நிமித்தாகவும் பயணிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வது என்றால் இவர்கள் கோவை வந்து அங்கிருந்து ரயில் அல்லது பேருந்துகளை பிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பயண நேரம் அதிகமாவதால் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. விடுமுறை காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் குடும்பத்துடன் பயணிக்கும் பயணிகள் தென் மாவட்டத்திற்கு செல்ல கடும் சிரமப்பட்டனர். இதனால், துத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த 2 ரயில்களின் போக்குவரத்தை வரும் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

அதே போல கோவை மேட்டுப்பாளையம் வரை தற்போது மெமு ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை போத்தனூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தினசரி 3 முறை போத்தனூர் வரை இந்த மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயிலை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி, பழனி, மற்றும் மதுரை வழியாக இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:- 
வரும் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கீழ்க்கண்ட ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார். * மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி (வழி : கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை) வண்டி எண்-16765 / 16766. * கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில், இனி நாள்தோறும் 3 முறை போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. மங்களூர் - ராமேஸ்வரம் (வாரம் இருமுறை). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments