கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் அருகில் ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி தொடங்கியது






கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் அருகில் ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரிய குளமாக நெடுங்குளம் உள்ளது. இந்நிலையில் நெடுங்குளத்திற்கு மழைக்காலங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாய்க்கால் அனைத்தும் அடைப்பட்டுவிட்டதால் குளத்தில் தண்ணீர் குறைந்த அளவே இருந்து வருகிறது. இதையடுத்து நெடுங்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுமார் 1080 அடியில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் புதிதாக ஆழ்துளை கிணறு (போர்) அமைக்க புதிய நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.

அதனடிப்படையில் நேற்று 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆழ்துளை கிணறு (போர்) அமைக்கும் பணி தொடங்கியது.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments