அதிராம்பட்டினத்தில் 20/07/2024 44 வது பள்ளிவாசலாக திறந்து வஃபு செய்யப்படவிருக்கும் ஆயிஷா பள்ளி






அதிராம்பட்டினத்தில் நாளை 20/7/2024  ஆயிஷா மஸ்ஜித் திறப்பு 40 நாட்கள் நடைபெற்று வந்த புகாரீ ஷரீப் நிகழ்ச்சி நிறைவு  மற்றும்  ஆய்ஷா மஸ்ஜித் திறப்பு தினம்


அனைத்து மஹல்லாவாசிகளும் , மற்றும்அதிரைக்கு அருகிலுள்ள ஊர்களில் இருந்து 5000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அதிராம்பட்டினம் இஸ்லாமியர்களின் மணிமகுடமாக திகழ்வது நடுத்தெரு வாவன்னா குடும்பத்தை சேர்ந்த வள்ளல்கள் உவந்தளித்த அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் அமைந்துள்ள " அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா என்ற நிறுவனம், இதை ஜாவியா என்று அனைத்து மஹல்லா வாசிகளும் அழைக்கின்றனர்.

இந்த  மஜ்லிஸ் ஹிஜ்ரி ஆண்டு துல்கஃதா மாதம் பிறை 29 ல் ஆரம்பித்து தொடர்ந்து நாற்பது நாட்கள் நடைபெற்று வருகின்றது இதன் நிறைவு நாள்20/7/2024. அன்று நடைபெறும் 
இந்த புனிதமிக்க மஜ்லிஸ் அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர்  கண்ணியத்திற்குரிய மௌலானா ,மௌலவி, கே.டி. முஹம்மது குட்டி ஹழ்ரத் கிப்லா தாமத் பரக்காத்துஹு அவர்கள் தலைமையில் காலை6 மணி முதல் 7:45 மணிவரை புகாரீ ஷரீஃப் ஓதப்பட்டு வருகின்றது

இந்த மஜ்லிஸில் தினந்தோறும்  அன்றாடம் ஓதப்படும் ஹதீஸ்களுக்கு உலமா பெருமக்களால் தமிழில் விரிவுரை நிகழ்த்தப்படுகின்றன.  சங்கைக்குரிய இச்சபையில் நாள்தோறும் நகரத்தின் பெரும்பாலான மக்கள் மற்றும் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும்,அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் மக்கள் பங்குபெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்ஸிற்கு வருகை தருவோர் உளு செய்தவர்களாக நல்ல நிய்யத் வைத்தவர்களாக அல்லாஹ்வை வேண்டியவர்களாக இம் மஜ்லிஸில் ஓதப்படும் ஹதீஸ்களையும் கேட்டவர்களாக நாற்பது நாட்களுக்கு கூடிவருகின்றனர் 

நிகழ்ச்சி நிறைவு நாளான 20/7/2024 அன்று உலக மக்கள் அமைதிக்கும்,நோய் நொடி இன்றி வாழ பிரார்த்தனை செய்யப்படும் இதில் அதிராம்பட்டினம் அருகிலுள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர்,முத்துப்பேட்டை மல்லிபட்டினம்  மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வதுகை தந்து கலந்து கொள்ள உள்ளனர் இதுபோன்று அண்டை மாநிலத்தின் கேரளாவில் இருந்து அதிகமான உலமா பெருமக்கள்  வருகைதர உள்ளனர் 

தமிழ்நாட்டில் அதிராம்பட்டினத்தில் தான் முதன்முதலாக இந்த மஜ்லிஸ் ஆரம்பிக்கபட்டதாக அறிகின்றோம்.இந்த புகாரீ ஷரீப் அதிராம்பட்டினத்தில் 1917 ம் ஆண்டு  துவங்கப்பட்டு இடையில் சில ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 1936 ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்று வருகின்றது அல்ஹம்து லில்லாஹ்

இவற்றுள் சிறப்பு யாதெனில்  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புகாரீ ஷரீப் மஜ்லிஸ் ஹிஜ்ரி ஆண்டு துல்கஃதா பிறை 29 ல் துவங்கி துல்ஹஜ் மாதம் முழுவதும் நடைபெற்று முஹர்ரம் மாதம் பிறை 11 ல் முடிவுற்று முத்தான மூன்று மாதங்களை இணைத்து மொத்தம் நாற்பது நாட்கள் நடைபெறுகின்றது அதிராம்பட்டினத்தின் எண்ணற்ற சிறப்புகளுக்குள் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது

மேலும் அதிராம்பட்டினத்தில் புதிதாக பட்டுக்கோட்டை சாலையில் மின்சார வாரியம் எதிர்புரம் ஆய்ஷா என்ற பெயரில் கண்ணாடி கிளாஸ் அதிகம் பொரிக்கப்பட்ட புதிய மஸ்ஜித் 20/7/2024 அன்று அஸர் தொழுகைக்கு வக்ஃப் செய்ய உள்ளனர் இதனால் அதிராம்பட்டினம் முழுவதுமாக மக்கள் குதுகலமாக காணப்படுகின்றனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments