கோட்டைப்பட்டினத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.




கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு துணை கலெக்டர் அமீர் பாஷா தலைமை தாங்கினார். மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு கோட்டைப்பட்டினம், மஞ்சக்குடி, கரகத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்களை பெற்றனர்.


முகாமில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் கோட்டைப்பட்டினம், கரகத்திக்கோட்டை, மஞ்சக்குடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் துணை தாசில்தார் முருகேசன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments