1. நமது ஊர் கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தை அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட வேண்டும்.
3..a) நமது ஜமாத் நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தப்படும் வகையில் நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் எதிரில் காலி இடத்தில் பொதுமக்கள் மற்றும் செல்வந்தர்களிடம் நிதி நன்கொடை வசூல் செய்து புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட வேண்டும். அதை திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நடத்த வாடகை விற்று அதில் வரும் பொருளாதாரத்தை ஜமாஅத் நிர்வாக செலவுக்காக பயன்படுத்த வேண்டும்.
b) நமது ஜமாத் நிர்வாகம் ஏற்கனவே நிதி தட்டுப்பாட்டில் உள்ளதால் மேலும் ஊருக்கு நிலையான பொருளாதார வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் எந்த ஒரு தனிநபரோ குழுவாகவோ சேர்ந்தோ மக்களிடம் தனியாக வசூல் செய்வது கட்டு மானங்கள் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
4. நமது ஊரில் உள்ள நெடுங்குளத்திற்கு மழைநீர் வரத்து முற்றிலும் தடைபட்டு இனி வரும் காலங்களில் நண்ணீர் வருவதும் குளம் நிறையும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டதால் கையிருப்பில் உள்ள சுமார் எட்டு லட்சத்து முப்பதாயிரத்துடன் மேலும் பொதுமக்களிடம் வசூல் செய்து நெடுங்குளத்திற்கு 1150 அடிக்கு ஆழ் குழாய் கிணறு (போர் ) அமைத்து சோலார் மின்சாரம் மூலம் நெடுங்குளத்துக்கு மட்டும் பயன்படுத்தி ஆண்டுமுழுவதும் நீர் ஆதாரம் ஏற்படுத்தப் பட வேண்டும்.
5. கோபாலபட்டினத்தில் வசித்து வரும் பொதுமக்களில் மொத்தம் எத்தனை குடிகள் முறையாக கணகெடுத்து அணைத்து விபரத்தினையும் அல் ஹரமின் அறக்கட்டளையின் உதவியுடன் கணினியில் (கம்ப்யூட்டரில்)முறையாக பதிவேற்றம் செய்து பராமரித்து வர வேண்டும்.
6. a)கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தின் நிர்வாக செலவுக்காக மாதா மாதம் சந்தா வசூல் செய்யப்படுகிறது. அதனை ஆண்டு சந்தாவாக ஒரே தடவையாக பொதுமக்கள் செலுத்த வேண்டும் இதன் மூலம் மாத வசூல் செய்பவரின் மாத சம்பளம் மிச்சப்படுத்தப்படும்..
b) தங்க மஹால் திருமண மண்டபத்தை ஜமாத் கணக்காளரே நிர்வகித்து வர வேண்டும்.
7. வெளியூரில் வெளிநாட்டில் தொழில் செய்வதற்காக வசித்து வரும் நமது ஜமாத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் தாங்கள் செலுத்தி வரும் மாத சந்தாவினை ஜி பே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நமது ஜமாத்தின் நிர்வாகத்திற்கு செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது. இதன் வாயிலாக வெளியூரில் வசூல் செய்யும் நபரின் சம்பள செலவினம் மிச்சப் படுத்தப்படும்.
8. நமது கோபாலப்பட்டினம் ஊருக்குள் யாசகம் கேட்டு வரும் யாசகர்கள் (முஷா பர்கள்) தினசரி வருவதனால் தாயமார்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.அவர்களை வாரம் ஒரு முறை அதாவது வெள்ளிக்கிழமை மட்டுமே வருமாறு கேட்டு கொள்வதுடன் அன்றைய தினம் யாசகம் கேட்டு வரும் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாமல் பொதுமக்கள் இயன்ற அளவு (ஹதியா )உதவி செய்ய வேண்டும்.
9.நமது ஊரில் எக்காரணத்தைக் கொண்டும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் விடக்கூடாது. அவ்வாறு விடுபவர்களுக்கு ஜமாத் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மாற்று வழியாக ஜமாத் மூலம் வீட்டுக்கு வீடு வசூல் செய்து கழிவுநீர் ஏற்படுத்தப்படும்.
10. ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு ஊராட்சி மன்றத்தை அணுகி நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
11.பெண் ஜனாசாவை குளிப்பாட்டுவதற்கு நமது ஊரில் பெண்கள் தட்டுப்பாடாகி விட்டதால் தகுதி வாய்ந்த விருப்பமுள்ள பெண்களுக்கு தக்க பயிற்சி கொடுத்து அவர்களுக்கான ஊதியம் ஜமாத் மூலம் கொடுக்கப்படும். பெண்கள் மதரசாவில் ஓதும் மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
12.நமது ஊரில் திருமண நிச்சயதார்த்தம் கட்டாயம் ஜமாத் நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் அந்த நிகழ்வு பள்ளிவாசலிலே மிக எளிமையாக நடைபெற வேண்டும் பெண் வீட்டாருக்கு வடை,கேக்கு போன்ற பொருள்கள் வழங்க கட்டாயப்படுத்தி கூடுதல் செலவு ஏற்படுத்தக் கூடாது.
13.திருமண விசேஷங்களில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக வெடி வெடிப்பதையும் பைக் கார்களில் அதிக ஒலி எழுப்புவதையும் இன்ன பிற அனாச்சாரங்களும் ஜமாத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு தயவு தாட்சனை இன்றி ஜமாத் நிர்வாகம் திருமணம் செய்து வைக்க கூடாது.திருமணத்துக்குப் பிறகு அனாச்சாரங்கள் நடைபெற்றாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
14.திருமண விவாகரத்து பெற்ற பெண் கட்டாயம் இத்தா காலம் ( துயர் எண்ணி காலம் கழித்தல்) நான்கு மாதம் பத்து நாட்கள் முடிவடைந்த பிறகு தான் மறுமணம் செய்ய ஜமாத் நிர்வாகிகளிடமிருந்து இருந்து (NOC) கடிதம் வழங்கப்படும் .
15.இனி வரும் காலங்களில் கோபாலப்பட்டினத்தில் உள்ள எந்த ஒரு குடிமக்களுக்கும் ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் விபத்து மற்றும் ஏனைய இடர்பாடுகள் ஏற்பட்டால் எந்தவித பேதம் இன்றி பொதுமக்கள் ஒன்று திரண்டு தக்க நியாயம் கிடைக்க ஜமாத் மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
16.ஊர் பாதுகாப்பு நலன் கருதி ஊர் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
17.கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் குறித்து பொது இடங்களிலோ, வாய் வழியாகவோ, சமூக ஊடங்களிலோ அவதூறு பேசினால் அவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
18.நமது ஊரில் தெருக்களை அதிக அளவில் ஆக்கிரமித்து வரும் நிலையை தடுப்பதற்கு வீடு கட்ட துவங்கும் முன்பே ஜமாத் நிர்வாகிகள் பார்வையிட செய்து முறையான முன் அனுமதி பெற வேண்டும். மேலும் தேவையில்லாமல் வீடுகளுக்கு முன்னால் ஆட்டு கல், கள்ளு கால்கள் நட்டு வைப்பது, ஜல்லி போன்ற பொருட்களை குவித்து பாதைகளை அடைப்பது தெருவை ஆக்கிரமித்து செப்டிக் டேங்க் போடுவது பாதைக்கு இடையூறு செய்வது கூடாது. மீறினால் அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஜமாத் மூலம் செலவு தொகை வசூல் செய்யப்படும்.
19.ஜமாத்துக்கு சொந்தமான வருமானம் மட்டும் வாடகை சந்தா வசூல் செய்யும் அனைத்து பணிகளும் ஜமாத்தின் அதிகாரப்பபூர்வ கணக்காளர் மட்டுமே செய்து ஜமாஅத்தின் பொருளாளர் இடம் ஒப்படைக்க வேண்டும்.
20. ஊரில் கட்டுமான பணிகளுக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்யக்கூடாது. கட்டிடத்திலேயே இரவில் தங்கவும் கூடாது. இதை அனைத்து கட்டிட இன்ஜினியர்களிடம் ஜமாத்தின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தங்க வைத்த ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டு உரிமையாளரும் இன்ஜினியர்கள் முழு பொறுப்பாளியாவார்கள்.
21.நமது ஊரில் வாகனத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்களின் ஒலி அளவை குறைத்தும் தொழுகை நேரங்களில் ஒலி அளவை முற்றிலும் நிறுத்தியும் வியாபாரம் செய்ய வேண்டும் (தண்ணீர் வாகனம் உட்பட) தண்ணீர் வாகனம் மாலை ஆறு மணிக்கு மேல் ஊருக்குள் வரக்கூடாது.
22. இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய(05-07-2024) ஜமாத்தின் நிர்வாகத்தில் ஏழு நிர்வாகிகளும்,ஒருங்கிணைப்பாளர்களாக ஒன்பது பேரும். இந்த நிர்வாகத்தில் முன்னாள் மற்றும் புதிய நபர்களைக் கொண்டு அதிகாரமிக்க ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட வேண்டும் அவர்களுக்கு இந்த நிர்வாகத்தின் போக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும் அதுபோல் முக்கிய பஞ்சாயத்து காவல் நிலைய பிரச்சினை ஊரின் முக்கிய முடிவுகளுக்கு இந்த கமிட்டியை முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
23.உறுப்பினர்களாக ஒவ்வொரு தெருவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் பத்திலிருந்து இருபது நபர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த ஏழு நிர்வாகிகளை தவிர திருமணத்திற்கு மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளுக்கு எவரையும் அழைக்க வேண்டிய கட்டாயம்பொதுமக்களுக்கு இல்லை.
23.a) நமது கோபால பட்டினம் ஊர் எல்லைக்குட்பட்ட பொதுவெளியில் மது அருந்த மற்றும் இதர போதை பொருட்களை விற்க, பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு பள்ளிவாசல் வளாகத்தில் வருபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறுபவர்கள் எந்தவித தயவு தாட்சினை இன்றி காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவர்.
b)நமது ஊரில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் எக்காரணம் கொண்டு இரவு 10 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் கூடுவதோ விளையாடுவதோ ஊரை சுற்றிக்கொண்டு வருவதோ கூடாது, மீறுபவர்கள் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். மேலும் நமது ஊரின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையை தினசரி ரோந்து செல்ல கேட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.