மணமேல்குடி ஊராட்சியில் மாதாந்திர வளர்ச்சி பணி கூட்டம்




மணமேல்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர வளர்ச்சி பணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மணமேல்குடி ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக பூர்த்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments