புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு




தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு-4-ன் கீழுள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனைச் சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அவர்கள் பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு-3-ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனைச் சார்ந்த பணியிடங்களில் பதவி உயர்வு பெற்று இருக்கின்றனர்.அந்தவகையில் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் வள்ளியம்மாள், சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் துணை இயக்குனராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மு.மணிமேகலை, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனராகவும் (மின் ஆளுமை), பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராகவும், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தன், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி உதவி இயக்குனர் கோ.சுப்பாராவ், அதே இயக்ககத்தில் துணை இயக்குனராகவும் (நிர்வாகம்), பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சோ.மதுமதி பிறப்பித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments